Latest Updates
-
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
சூரிய பெயர்ச்சியால் ஜூலை 16 முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கப்போகுது...
Sun Transit In Cancer On 16 July 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.

இந்நிலையில் சூரியன் 2023 ஜூலை 16 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் தமிழ் மாதமான ஆடி மாதம் பிறக்கிறது. கடக ராசியானது சூரியன் நட்புறவு கொண்டிருக்கும் சந்திரன் ஆளும் ராசியாகும்.
கடக ராசிக்குள் சூரியன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதுவும் அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் மோசமான பலனையும் பெறலாம். இப்போது கடக ராசிக்கு சூரியன் செல்வதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலமானது மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று சவாலானதாக இருக்கும். தாயாரின் உடல்நிலையில் சில ஏற்ற தாழ்வுகள் ஏற்படக்கூடும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் பேசும் போது சிந்தித்து வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். இக்காலத்தில் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் துணிச்சல் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகளும், செய்யும் வேலைகளும் பாராட்டைப் பெறும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். கடினமாக உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தின் உடன்பிறந்தவர்களுடன் ருத்து வேறுபாடுகள் வளர விடாதீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நீதிமன்றம் வரை பிரச்சனைகளை கொண்ட செல்லாமல் பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் சதிக்கு பலியாக வாய்ப்புள்ளதால், உஷாராக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அரசு தொடர்பான வேலைகள் நிலுவையில் இருந்தால், அது இக்காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களுடனான தொடர்பு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிகப்படியான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நிதி பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். குழந்தை தொடர்பான கவலைகள் இருக்கும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சூரியனின் அருளால் நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். எடுக்கும் முடிவுகளும், செய்யும் வேலைகளும் பாராட்டைப் பெறும். புதிய வேலையைத் தொடங்க இக்காலம் சாதகமாக இருக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர விடாதீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சூரிய பகவான் பெரிய சாதனைகளைப் புரிய வைப்பார். இக்காலத்தில் உங்களின் உத்திகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், இக்காலம் சாதகமாக இருக்கும். துணிச்சல் அதிகமாக இருப்பதால், மோசமான சூழ்நிலைகளிலும் எளிதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் திட்டங்களை இக்காலத்தில் ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். உங்களுக்கு எதிராக சிலர் சதி செய்வார்கள். எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நீதிமன்ற வழக்குகள் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் விஷயங்களை வெளியில் பேசி தீர்ப்பது நல்லது.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமண விவகாரங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் தொடர்பான விஷயங்களில் கூட உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அரசாங்கத்தால் நடக்க வேண்டிய வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலமானது ஒரு வரப்பிரசாதமாக இருக்காது. சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆனால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும், எடுத்த முடிவுகள் மற்றும் செய்த வேலைகளும் பாராட்டப்படும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். வியாபாரிகள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளால் கவலைகள் சற்று அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். புதிதாகத் திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications