Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Sun Transit In Cancer In July 2023: வேத ஜோதிடத்தில், சூரியன் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுகிறார். நவவிரகங்களில் சூரிய பகவான் மாதந்தோறும் ராசியை மாற்றுபவர். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் இன்று சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழைகிறார். இதனால் ஆடி மாதம் பிறக்கிறது. இந்த கடக ராசியில் சூரியன் ஆக்ஸ்ட் 17 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைவார்.

சூரியன் கடக ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் இந்த சூரிய பெயர்ச்சியால் ஆடி மாதமானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக, பல வெற்றிகளையும், நிதி நன்மைகளையும் தரக்கூடியதாக இருக்கும். இப்போது எந்த ராசிக்காரர்கள் ஆடி மாதத்தில் மிகச்சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் 12 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இதுவரை உங்களின் பணம் சிக்கியிருந்தால், இக்காலத்தில் அது கைக்கு வந்து சேரும்.
வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் தங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். உங்களின் பேச்சு பலவிதமான நன்மைகளைப் பெறச் செய்யும். இக்காலத்தில் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வியாபாரம் செய்பவர்கள், தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் மற்றும் நல்ல லாபத்தைத் தரும் திட்டங்களை தீட்டி வெற்றி காண்பார்கள். மேலும் வேலை இல்லாமல் நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
வீட்டின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தை உயர்த்த பல முயற்சிகளை எடுப்பார்கள் மற்றும் அதில் வெற்றியும் பெறுவார்கள். இதுவரை தந்தையுடன் பிரச்சனையை கொண்டவர்கள், இக்காலத்தில் தந்தையின் ஆதரவைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதுவரை தோல்விகளை சந்தித்து வந்தவர்கள், இனிமேல் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பார்கள். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும்.
வேலை மற்றும் தொழில் தொடர்பான பயணங்களை இக்காலத்தில் மேற்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் இந்த பயணங்கள் நல்ல ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications