Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சூரிய பெயர்ச்சியால் ஆகஸ்ட்3 முதல் இந்த 2 ராசிக்காரர்களுக்கு எல்லா வழியிலும் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்!
Sun Transit In Ashlesha Nakshatra 2023: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அதுமட்டுமின்றி, அவ்வப்போது சூரியன் நட்சத்திரங்களையும் மாற்றுவார். அப்போது சில ராசிகள் அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டத்தையும் பெறுகிறார்கள்.
சூரியன் ஆற்றலின் சக்தியாகக் கருதப்படுகிறது. எந்த ராசியில் சூரியன் சரியாக அமைந்திருக்கிறாரோ, அவர்கள் தொழில், உறவுகள், கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் அபரிமிதமான பலன்களைப் பெறலாம். அதுவே தவறாக அமைந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்தலாம்.

எனவே, சூரியப் பெயர்ச்சி ஏற்படும் போதெல்லாம், மாற்றங்கள் மிகப்பெரியதாக இருக்கும். இந்த ஆண்டு, ஆஷ்லேஷ நட்சத்திரத்தில் சூரிய சஞ்சாரம் நடைபெறுகிறது. 2023 ஆகஸ்ட் 03 வியாழக்கிழமை மாலை 04:04 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சூரியன் ஆஷ்லேஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எந்த 2 ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பலன் தரும் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டம் மிக அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படும். இது உங்கள் உணர்வுகளை நேர்மறையான முறையில் பாதிக்கும். இது மற்றவர்களிடம் நீங்கள் மறைந்திருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும். நீங்கள் அனைவரிடமும் உங்கள் உணர்வுகளை நேர்மறையாக வைத்திருக்க முடிந்தால், எல்லாம் பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
இல்லையெனில் எதிர்மறையாக இருக்கும். அதன் விளைவுகளை நீங்கள் மட்டுமே அனுபவிப்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நல்ல விருந்து ஏற்பாடு செய்து குடுமபத்துடன் நேரத்தை செலவிடலாம் மற்றும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடலாம்.
பரிகாரம்: இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் தந்தை அல்லது தந்தை போன்ற நபர்களை மதிக்க வேண்டும்.
சிம்மம்
ஆகஸ்ட் மாதத்தின் இந்த நாட்கள் சிம்ம ராசி நேயர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்கலாம். நீங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு உணரவில்லை என்றாலும், விஷயங்களை நீங்களே வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்கு உத்தரவு கொடுப்பீர்கள். எந்த விஷயத்தையும் நீங்கள் வேண்டுமென்றே செய்ய மாட்டீர்கள். ஆனால் அது தானாகவே நடக்கும்.
தேவையில்லாமல் மற்றவர்களைப் பற்றி கிசுகிசுப்பதில் மகிழ்வீர்கள். உங்கள் சொந்த நடத்தையால் சில ஆச்சரியங்களை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நடத்தையை சிறிது நேரம் கழித்து நீங்கள் சரிசெய்ய முடியும். இந்த ராசிக்காரர்கள் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, தங்கள் ஃபேஷன் உணர்வை மாற்ற வாய்ப்புள்ளது. பேசும்போது நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள், மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்.
பரிகாரம்: தவறாக ஏதும் நடக்காமல் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications