Latest Updates
-
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 5 ராசிகளின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
10 கிராம் 1 கோடிக்கு விற்கப்படும் உலகின் விலையுயர்ந்த மரம் எது தெரியுமா? இதுல அப்படி என்னதான் இருக்கு? -
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
சூரிய பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Sun Transit In Aries On April 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். இந்த சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு மேஷ ராசியில் நுழைய தொடங்கி, மே 14 ஆம் தேதி வரை இந்த ராசியில் பயணிக்கவுள்ளார்.
சூரியன் மேஷ ராசியில் நுழையும் போது தான் சித்திரை மாதம் பிறக்கிறது. சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு நுழைவதால், ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த ஆண்டின் சித்திரை மாதத்தில் குரோதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் ராசியை மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். இப்போது 2024 ஏப்ரல் மாத சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். புதிய சொத்து, வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களின் புகழ் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல பொருன் இன்பங்களைப் பெறுவீர்கள். உங்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதவால் பதவி உயர்வைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பண வரவைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications