Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்!
1 வருடம் கழித்து மேஷம் செல்லும் சூரியன்: ஏப்ரல் 13 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றியும், லாபமும் குவியும்
Sun Transit In Aries On 13 April 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் 1 மாதம் வரை பயணிப்பார். மேலும் இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சூரியன் தற்போது குரு பகவானின் ராசியான மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2024 ஏப்ரல் 13 ஆம் தேதி சூரியன் செவ்வாயின் ராசியான மேஷ ராசிக்கு செல்லவுள்ளார்.
சுமார் 1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு சூரியன் செல்லவிருக்கிறார். ஜோதிடத்தில் சூரியனும், செவ்வாயும் நட்புணர்வு கொண்டவர்கள். பொதுவாக சூரியனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் நண்பனின் ராசிக்கு சூரியன் செல்வதால், அதன் தாக்கம் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் சிறப்பான பலனைப் பெறவுள்ளார்கள். அதுவும் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, தொழிலில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது மேஷம் செல்லும் சூரியனால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ள ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் திருமணமானவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். வணிகத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதுவும் சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் தேடி வரும். உங்களின் பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் பேச்சால் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். உங்களின் முக்கியமான வேலை பேச்சால் வெற்றிகரமாக முடிவடையும். ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் புதிய வாகனம் அல்லது நிலத்தை வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியுடன், லாபத்தையும் பெறுவார்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications