Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
சூரிய பெயர்ச்சியால் பிப்ரவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Sun Transit In Aquarius On 13 February 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது சூரியன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
சூரியன் சனி பகவானின் மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலர் கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கும். இப்போது சூரியன் கும்ப ராசியில் நுழைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக, பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தன்னம்பிக்கையாலும், ஆற்றலாலும் நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications