Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா?
500 ஆண்டுகளுக்கு பின் சூரியன் உருவாக்கியுள்ள உபயாச்சாரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்...
Sun Transit In Aquarius Made Ubhayachari Rajyog: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சமீபத்தில் தான் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசியில் சூரியன் நுழைந்த பின், இரண்டு புறமும் இரண்டு கிரகங்கள் அமைந்துள்ளன. அதுவும் ராகு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சூரியனுக்கு இரண்டு புறமும் அமைந்து, உபயாச்சாரி ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது.

முக்கியமாக இந்த உபயாச்சாரி ராஜயோகமானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உபயாச்சாரி ராஜயோகமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் வேலை மற்றும் வியாபாரமானது மிகவும் சிறப்பாக இருக்கும். சிலர் திடீரென்று நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதோடு வெளிநாட்டில் இருந்து நல்ல பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கும் வாய்ப்பை பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு உபயாச்சாரி ராஜயோகமானது வருமானத்தில் பெரிய உயர்வை ஏற்படுத்தும். சிலர் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். புதிய தொழிலைத் தொடங்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வணிக ஒப்பந்தங்கள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு உபயாச்சாரி ராஜயோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சிலர் முக்கியமான தொழில் முடிவுகளை எடுக்கலாம். வணிக ஒப்பந்தங்களும் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணப் பிரச்சனைகள் நீங்கி, நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications