Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
சூரிய பெயர்ச்சியால் பிப்ரவரி 13 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
Sun Transit In Aquairus On 13 February 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதி. இவர் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார். சூரியனும், சனி பகவானும் தந்தை-மகன் உறவைக் கொண்டிருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகிறார்கள். எனவே சூரியன் சனி பகவானின் ராசியில் பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் நிறைய நிதி இழப்பையும், தொழிலில் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். அதோடு சமூகத்தில் மரியாதை குறைவும் சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய வாக்குவாதங்களிலும் ஈடுபடலாம். இப்போது கும்பம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சிரமங்கள் அதிகரிக்கலாம். அதோடு மன அழுத்தத்தாலும் அவதிப்படலாம். பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கோபமே பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். வியாபாரத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். பேச்சில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதையும் சிந்தித்து பேச வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்காது. உங்களின் திட்டங்களை மாற்ற வேண்டும். சற்று நம்பிக்கையின்மையைக் கொண்டிருப்பீர்கள். தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள். ஆகவே நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. சில காரணங்களால் பண பற்றாக்குறையை சந்திக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையை மாற்ற வேண்டிவரும். வேலையில் சரியாக கவனத்தை செலுத்த முடியாது. வேலை தொடர்பாக நிறைய பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். பணத்தை நன்கு சம்பாதிப்பீர்கள். ஆனால் அந்த பணத்தை சேமிக்க முடியாது. சில விஷயங்களில் தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications