Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் மே 11 வரை இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
Sun Transit 2024 In Bharani Nakshatra: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒரு முறை ராசியை மாற்றுவார். அதே சமயம் 15 நாட்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார். இப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
ஜோதிடத்தின் படி, சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தால், இந்நிலையில் ஏப்ரல் 27 ஆம் தேதி சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளார். இந்த நட்சத்திரத்தில் மே 11 ஆம் தேதி வரை இருப்பார். பரணி 27 நட்சத்திரங்களில் 2 ஆவது நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிரன்.

சூரியனும், சுக்கிரனும் நட்புறவு கொண்டுள்ள கிரகங்கள் என்பதால், இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கவுள்ளது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வருமானங்கள் திறக்கப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கடின உழைப்பாலும், திறமையாலும் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் திறப்பதோடு, நிறைய பணத்தையும் சேமிக்க முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். நீண்ட கால மனக் கவலைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது ஒரு அற்புதமான பலன்களை வழங்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். வணிகர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். அதே சமயம் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். உறவுகளில் இருந்த மன கசப்புகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications