Latest Updates
-
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் நவம்பர் 17 வரை இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்...
Sun Transit 2023 In Vishaka Nakshatra: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி நிகழும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நவம்பர் 07 ஆம் தேதி சூரியன் விசாக நட்சத்திரத்தில் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வரை இருப்பார். ஜோதிடத்தின் படி விசாக நட்சத்திரமானது குரு பகவானின் நட்சத்திரமாகும்.

விசாக நட்சத்திரத்தில் சூரியன் நுழைந்திருப்பதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிகரிப்பதோடு, அதிர்ஷ்டமானதாகவும் இருக்கும். அதோடு லட்சுமி தேவியின் அருளால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இப்போது சூரியன் விசாக நட்சத்திரத்தில் இருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக பல சாதகமான பலன்கள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
தனுசு
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனசு ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வரன் கிடைக்கும்.
கும்பம்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலைகளை மேற்கொண்டால் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
உங்களின் தன்னம்பிக்கை மற்றும் செயல்திறனைக் கண்டு உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவதோடு, பதவி உயர்வையும் வழங்கலாம். குறிப்பாக இக்காலத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications