Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சூரிய பெயர்ச்சியால் உருவான விபரீத ராஜயோகம்: இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்
Sun Transit 2023 In Sagittarius Make Vipreet Rajyog: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரிய பகவான் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். மேலும் சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2023 டிசம்பர் 16 ஆம் தேதி, அதாவது இன்று சூரியன் குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
சூரியன் தனுசு ராசியில் நுழைவதால் எதிர் ராஜயோகமானது விபரீத ராஜயோகம் உருவாகிறது. இந்த விபரீத ராஜயோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அளவில் நிதி நன்மைகளும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. மேலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றி மேல் வெற்றி காணப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

விபரீத ராஜயோகம் எப்போது உருவாகும்?
ஜோதிடத்தின் படி, 8 ஆவது வீட்டின் அதிபதி 6 அல்லது 12 ஆவது வீட்டிற்கு வரும் போது விபரீத ராஜயோகம் உருவாகிறது. அதேப் போல் தனுசு ராசியில் சூரியன் நுழையும் போது, அவர் மகர ராசியில் 12 ஆவது வீட்டிற்குள் நுழைகிறார். இவர் இந்த ராசியின் 8 ஆவது வீட்டின் அதிபதி.
இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் விபரீத ராஜயோகம் உருவாகிறது. இது ஒரு மங்களகரமான ராஜயோகம் என்பதால் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை இந்த யோக காலத்தில் பெறக்கூடும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்று விபரீத ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கும். முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சு மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் செயல்திறனால் உயர் அதிகாரிகளை ஈர்ப்பார்கள். வியாபாரிகளின் சில முக்கியமான திட்டங்கள் நிறைவேறும். ஆன்மீகத்தில் சற்று ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை வழங்கும். இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். படிப்பிற்காக வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர்அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த யோக காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications