Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சனி, சூரியன், ராகுவால் உருவான சமசப்தம மற்றும் சண்டாள யோகம்: இந்த 4 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
Sun Saturn Rahu Made Samsaptak And Chandal Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் மற்ற கிரகங்களின் மீது கொடிய பார்வையை உருவாக்கும். அப்படி கொடிய பார்வை விழும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சூரியன், சனி, ராகு ஆகிய கிரகங்களின் கொடிய பார்வை உருவாகியுள்ளது. அதாவது இந்த மூன்று கிரகங்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டுள்ளன. அதே வேளையில் ராகுவும், குரு பகவானும் மேஷ ராசியில் ஒன்றிணைந்து குரு சண்டாள தோஷத்தை உருவாக்கியுள்ளனர். அதோடு சமசப்தம யோகமும் உருவாகியுள்ளது.

இப்படி இரண்டு யோகங்களும் உருவாகியுள்ளதால், 4 ராசிக்காரர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படுவதோடு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு ஏற்றஇறக்கமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். அக்டோபர் 30 ஆம் தேதி வரை எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதல் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி, ராகு, சூரியனின் பார்வையானது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். முக்கியமாக யாருக்கும் இக்காலத்தில் கடன் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதோடு, எந்த ஒரு புதிய வேலைகளையும் தொடங்க வேண்டாம். இல்லாவிட்டால், இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தொழிலில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். நல்ல பண வரவு இருந்தாலும், அதற்கேற்ப செலவுகளும் அதிகமாக இருக்கும். முக்கியமாக மருத்துவ செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். பண முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலையை மாற்ற நினைத்தால், அதை இக்காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சனி, ராகு, சூரியனின் கொடிய பார்வை மற்றும் சண்டாள யோகத்தால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்பவர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் எந்த ஒரு மாற்றத்தை செய்வதாக இருந்தாலும், அதை இக்காலத்தில் தவிர்க்க வேண்டும். பணத்தை முதலீடு செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். தொழிலை விரிவுபடுத்த நினைத்தால், அதைத் தவிர்க்க வேண்டும். உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications