Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கை: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Sun Saturn Conjunction 2024 In Aquarius After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அதே சமயம் நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சூரியனும், சனி பகவானும் தந்தை மகனாக இருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகின்றனர்.
இவ்விரண்டு கிரகங்களின் சேர்க்கை எந்த ராசிகளில் நிகழ்ந்தாலும், அதன் தாக்கம் சற்று மோசமானதாகவே இருக்கும். மேலும் இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையல் பிப்ரவரி 14 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழைவுள்ளார். இதனால் கும்ப ராசியின் சனி சூரிய சேர்க்கை 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.
இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவதோடு, வியாபாரத்தில் நல்ல வெற்றியையும் லாபத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது கும்பத்தில் நிகழும் சனி, சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி, சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி, சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இதன் காரணமாக நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடிவடையும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். தொழில் ரீதியாக, நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி, சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக சமூகத்தில் உங்களின் மதியாதைவும், கௌரவமும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications