Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
சனி சூரிய சேர்க்கை முடிவு: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகுது..
Sun Saturn Combination Ends Today: வேத ஜோதிடத்தில் சூரியனுக்கும், சனி பகவானுக்கும் இடையிலான உறவு தந்தை-மகன் உறவாக இருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகின்றனர். எனவே இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் ஒன்றாக பயணிக்கும் போதோ அல்லது எதிரெதிராக இருக்கும் போதோ, அதன் தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும்.
அந்த வகையில் கடந்த ஒரு மாத காலமாக சூரியனும், சனியும் எதிரெதிரில் பயணித்து வந்தன. இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் சற்று மோசமாக இருந்தது. பல ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்து வந்தார்கள்.

ஆனால் 2023 செப்டம்பர் 17 ஆம் தேதி, அதாவது இன்று சூரியன் ராசியை மாற்றுவதால், சனி சூரியனால் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருகிறது. சூரியன் தனது நண்பனான புதனின் ராசிக்கு செல்கிறார். இதனால் இன்று முதல் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இன்று முதல் அப்பிரச்சனைகள் நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்கள் இதுவரை மிகுந்த வேலை அழுத்தத்தை சந்தித்து வந்தால், இனிமேல் அதிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த தடைகள் நீங்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையின் பிரச்சனைகள் அதிகரித்து, அவருடைய ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் பிரிவு ஏற்படலாம். தொழில் தொடர்பான எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், நன்கு சிந்தித்து பின் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைத்தால் நல்ல முடிவுகளைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும் மற்றும் நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இதுவரை பல பிரச்சனைகளை சந்தித்திருந்தால், இன்று முதல் பெரிய நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளால் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். இனிமேல் முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications