Latest Updates
-
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா?
மேஷ ராசியில் குரு, ராகு, சூரியன் சேர்க்கை: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்கு நல்ல காலம் ஆரம்பிக்குது...
Sun Rahu Jupiter Conjunction In Aries On April 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது, கிரகங்களின் சேர்க்கைகளும் நிகழ்வதுண்டு. அப்படி கிரகங்கள் ஒன்றாக ஒரே ராசியில் பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 12 மாதங்களுக்கு பின் ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு முன் ராகு மேஷ ராசியில் பயணித்து வந்தார்.
அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானும் மேஷ ராசிக்கு செல்கிறார். மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் பயணிப்பார். இத்தகைய குரு 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைகிறார். குரு மேஷ ராசிக்கு நுழையும் போது ஏற்கனவே அந்த ராசியில் உள்ள சூரியன் மற்றும் ராகுவுடன் இணைந்து பயணிப்பார்.

இந்த சேர்க்கையானது மே 14 ஆம் தேதி வரை இருக்கும். முக்கியமாக இந்த கிரகங்களின் சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் பல அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு, சூரியன், ராகு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பது எளிதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான சில பெரிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களின் ஆளுமை மேம்படும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு, சூரியன், ராகு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களைத் தேடி நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். இக்காலத்தில் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு, சூரியன், ராகு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 22 முதல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை சிறப்பாக இருக்கும். அந்த தன்னம்பிக்கையால் பல காரியங்களை செய்து முடிப்பீர்கள். இக்கால கட்டத்தில் உங்களால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ன ஆசை நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


