Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சோபகிருது தமிழ் புத்தாண்டில் சனி ராகு சேர்க்கை: இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
Tamil New Year 2023: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அதுவும் சூரியன் மேஷ ராசியில் நுழையும் போது தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அந்த வகையில் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சோபகிருது என்னும் புதிய தமிழ் ஆண்டு பிறக்கிறது. ஏற்கனவே மேஷ ராசியில் ராகு பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் மேஷ ராசிக்கு செல்வதால், மேஷ ராசியில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது.
பொதுவாக ராகு சூரியனின் எதிரி. தமிழ் புத்தாண்டில் சூரியன் ராகுவுடன் சேர்ந்து மேஷ ராசியில் பயணிப்பதால், அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதுவும் இந்த சேர்க்கையானது ஒரு மாத காலம் நீடித்திருக்கும். இப்போது 2023 தமிழ் புத்தாண்டில் சூரியன் ராகு சேர்க்கையால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறவுள்ளார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் கொஞ்சம் அகங்காரத்துடன் இருக்கலாம். இக்காலத்தில் பேசும் போது சற்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு வேலை செய்பவர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சற்று நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை சற்று டென்சன் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். வணிகர்களுக்கு இக்ககாலம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் மன உளைச்சல் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் செலவுகள் இக்காலகட்டத்தில் அதிகரிக்கும். பயணங்களால் எவ்வித நற்பலனும் கிடைக்காது. உங்கள் தாயாருடனான உறவு மோசமடையும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலம் லாபகரமானதாக இருக்கும். பங்கு சந்தையில் இக்காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் பயணம் செய்வதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல பதவி உயர்வைப் பெறலாம். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவரது ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நீண்ட நாட்களாக முதலீடுகளில் இருந்து வரவிருக்கும் பணம் இக்காலத்தில் கிடைக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறையில் இருப்பவர்கள் இக்காலத்தில் புகழையும், வெற்றியையும் பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலமானது கன்னி ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கம். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு மீண்டும் வராது. இக்காலத்தில் உங்களின் பேச்சை கவனியுங்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் குடும்ப வாழ்க்கை சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை சிறப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். பணிபுரிபவர்கள் சோம்பலை தவிர்த்து, தங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதைத் தள்ளிப் போட அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். இக்காலத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். தந்தையின் உதவியால் புதிய வேலைகளைத் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் மாணவர்கள் படிப்பில் சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். காதல் விஷயங்களில் தோல்வியை சந்திக்கக்கூடும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கு எதிராக எதிரிகள் சதி செய்வார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சற்று கடினமாக இருக்கும். இக்காலத்தில் எவ்வித புதிய ஒப்பந்தங்களையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால், அது இழப்புக்களை ஏற்படுத்தும். காதல் விஷயத்தில் தோல்வி காண வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இக்கால கட்டத்தில் தைரியம் அதிகரிப்பதோடு, பயணங்களால் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் உங்களின் பேச்சு சற்று கடுமையாக இருக்கும். நிதி இழப்புகளுக்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த நிதி பரிவர்த்தனைகளையும் இக்காலத்தில் செய்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications