மேஷ ராசியில் சூரியன் ராகு சேர்க்கை: ஏப்ரல் 14 முதல் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..

Sun Rahu Conjunction In Aries On April 2023: கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரக சேர்க்கைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில சமயங்களில் கிரக சேர்க்கைகளின் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாவதுண்டு. இந்நிலையில் மேஷ ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார். இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியனும் மேஷ ராசிக்கு செல்கிறார்.

இதனால் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசியில் ராகு-சூரிய சேர்க்கை நிகழ்கிறது. ராகு சூரிய சேர்க்கையானது சற்று பிரச்சனைகளைத் தரும். குறிப்பாக ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட வைக்கும். இது தவிர வாழ்விலும் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இப்போது மேஷ ராசியில் ராகு மற்றும் சூரியன் ஒன்றாக பயணிப்பதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

Sun Rahu Conjunction In Aries On April 2023: These Zodiacs Should Be Careful In Tamil

கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் இந்த சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், அவர்களின் ஆரோக்கியம் மோசமாகக்கூடும். மேலும் வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் இக்காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் பல விஷயங்களில் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. ஆனால் குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் எந்த ஒரு புதிய விஷயங்களையும் தொடங்காதீர்கள். இல்லாவிட்டால், இழப்பு அல்லது தோல்வியை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் பட்ஜெட் பாதிக்கப்படலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்கால கட்டத்தில் தோள்பட்டை மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட வாய்ப்புள்ளது. நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் இக்காலத்தில் சற்று குறைவான லாபத்தையே பெறக்கூடும்.

இக்காலகட்டத்தில் உங்களின் எதிரிகள் வலிமையானவர்களாக, உங்கள் வீழ்த்தக்கூடியவர்களாக இருப்பார்கள். இக்காலத்தில் தேவையில்லாத பயணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. இதனால் உங்களின் பணம் தேவையில்லாமல் செலவாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். ஆனால் இந்த காலத்தில் எந்த முதலீடுகளையும் செய்துவிடாதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, April 6, 2023, 13:30 [IST]
Desktop Bottom Promotion