Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
ராகு சூரிய சேர்க்கை: மே 15 வரை இந்த ராசிக்காரங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
Sun Rahu Conjunction In Aries 2023: நவகிரகங்களில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைந்தார். 12 மாதங்களுக்கு பின் மேஷ ராசியில் சூரியன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான ராகு பயணித்து வந்தார். இதனால் மேஷ ராசியில் ராகு சூரிய சேர்க்கை ஏற்பட்டது.
பொதுவாக மேஷ ராசியில் சூரியன் வலுவாக இருப்பார். ஆனால் சூரியனின் எதிரியான ராகு மேஷ ராசியில் இருப்பதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் சற்று அதிகமாக இருக்கும். அதுவும் மே 15 ஆம் தேதி வரை இந்த சேர்க்கை உள்ளது. இப்போது மேஷ ராசியில் நிகழ்ந்துள்ள ராகு சூரிய சேர்க்கையால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் பேச்சில் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை டென்சன் நிறைந்து இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் நற்பலன்கள் எதுவும் கிடைக்காது. தாயுடனான உறவு மோசமடையும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும். ஷேர் மார்கெட்டில் நல்ல லாபத்தைப் பெற முடியும். குடும்பத்தினருடன் பயணம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். நண்பர்களுடன் வெளியே செல்லும் வாய்ப்புக்கள் உருவாகும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவரது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். தடைபட்ட முதலீடுகளை இக்காலத்தில் செய்தால் லாபம் கிடைக்கும். இக்காலத்தில் தைரியம் அதிகரிக்கும். ஊடகத்தில் இருப்பவர்கள் நல்ல புகழை பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலம் சற்று மோசமாக இருக்கும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு நடந்து கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் நண்பருடன் சேர்ந்து புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதை தள்ளிப் போடுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் இலக்குகளை அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்களின் எதிரிகளை வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். தந்தையின் ஆசியால் புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பில் சிக்கல்களை சந்திப்பார்கள். காதல் தோல்வியை சந்திக்கக்கூடும். வணர்கள் நல்ல பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் நண்பர்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் கடினமாக இருக்கும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்வார்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கும். காதல் தோல்வியடைய வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் உங்கள் தைரியம் அதிகரிக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆன்மீக பயணங்களுக்கான வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இக்காலத்தில் உங்கள் பேச்சு சற்று கடுமையாக இருக்கும். நிதி இழப்புக்களை சந்திக்க வாய்ப்புள்ளதால், கடன் கொடுக்கும் முன் யோசியுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை இக்காலத்தில் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications