Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்னும் 5 நாட்களில் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகுது..
Sun Nakshatra Transit 2024 In Thiruvonam: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தலைமைப்பண்புகள், தைரியம், அதிகாரம், நம்பிக்கை, ஈகோ, அரசாங்கத் துறை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இது தவிர சூரியன் அவ்வப்போது நட்சத்திரங்களையும் மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றம் மட்டுமின்றி, நட்சத்திர மாற்றமும் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சூரியன் ஜனவரி 24 ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் பிப்ரவரி 07 ஆம் தேதி வரை பயணிக்கவுள்ளார். முக்கியமாக திருவோணம் நட்சத்திரம் மகர ராசியைச் சேர்ந்தது. மகரம் சனி பகவானின் ராசி. அதே சமயம் திருவோணம் சந்திரனின் ராசி.
எனவே சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது, சனியின் தாக்கமும் சற்று இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களை வழங்கும். முக்கியமாக பணிபுரிபவர்கள் தங்கள் துறையில் நல்ல புகழைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
பணியிடத்தில் உங்கள் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலர் பதவி உயர்வு அல்லது விருதுகளையும் பெறலாம். அதோடு வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியையும், முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியான்து மகத்தான வெற்றியையும், நிதி நன்மைகளையும் வழங்கப் போகிறது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி பிணைப்பு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அதோடு தந்தையின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும் கடின உழைப்பிற்கான முழு பலன் இக்காலத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications