Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
சூரியன்-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது!
நவகிரகங்கள் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில நேரங்களில் கிரக சேர்க்கைகளும், அவற்றால் சுப மற்றும் அசுப யோகங்களும் உருவாகும்.
அந்த வகையில் 2023 ஜூன் மாதம் 2 முறை ஒரு அற்புதமான மற்றும் சக்தி வாய்ந்த ராஜயோகம் சூரியன் மற்றும் புதனால் உருவானது. அதில் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் அதுவும் ஜூன் 07 ஆம் தேதி ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவானது.

அதன் பின் சூரியன் மிதுன ராசிக்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து புதன் ஜூன் 24 ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார். இதனால் மீண்டும் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் மிதுன ராசியில் சக்தி வாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.
இந்த ராஜயோகமானது ஜூலை 17 வரை நீடித்திருக்கும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும், கௌரவமும் அதிகரிக்கும். இப்போது எந்த ராசிக்காரர்கள் மிதுனத்தில் உருவாகும் ராஜயோகத்தால் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும். இக்காலத்தில் திடீரென்று பணம் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். இக்காலத்தில் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது வருமானம் மற்றும் உடன்பிறப்புக்களின் வீடு. எனவே இக்காலத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல பண வரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் சூரியன் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. எனவே இக்காலமானது தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் இனிமேல் வெற்றிகரமாக நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications