Latest Updates
-
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன?
சூரியன் புதன் சேர்க்கையால் உருவாகும் புதாத்திய ராஜயோகம்: இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் ஜொலிக்கப் போகுது...
Budhaditya Rajyoga 2024: நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். ஜோதிடத்தின் படி, சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது சூரியன் மகர ராசியில் பயணித்து வருகிறார். இதனால் தை மாதம் பிறந்துள்ளது.
இந்நிலையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் மகர ராசியில் நுழையவுள்ளார். புதன் மகர ராசியில் நுழைந்ததும், ஏற்கனவே பயணித்து வரும் சூரியனுடன் இணைந்து பயணிக்கவுள்ளார். சூரியனும், புதனும் இணையும் போது உருவாகும் யோகம் தான் புதாதித்ய யோகம். இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட யோகம் பிப்ரவரி 01 ஆம் தேதி உருவாகவுள்ளது. ஏனெனில் இந்நாளில் தான்புதன் மகர ராசியில் நுழையவுள்ளார். இப்போது மகர ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வெளிநாடுகளில் இருந்தும் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆனால் ஆரோக்கியத்தல் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகரிக்கும். அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டு வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும். உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ப வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிலர் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications