Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சூரியன் புதன் உருவாக்கும் புதாதித்ய ராஜயோகம்: இன்னும் 10 நாட்களில் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கபோகுது
Sun Mercury Make Budhaditya Rajyog In Sagittarius: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மற்றும் கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சுப மற்றும் அசுப யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனான புதன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். சூரியன் தனுசு ராசியில் நுழையும் போது, ஏற்கனவே அந்த ராசியில் புதன் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் சுப யோகமான புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது அற்புதமான பலன்களை வாரி வழங்கப் போகிறது. முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இப்போது புதாதித்ய ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். மேலும் சூரிய பகவான் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகளின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். யோசித்து மேற்கொண்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சூரிய பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரியல் எஸ்டேட், சொத்து தொடர்பான வேலைகளை செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளில் விரும்பிய வெற்றியைப் பெறுவார்கள். தாயாருடனான உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, இனிமை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications