Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும்
சூரியன்-புதன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
Vipreet Rajyoga: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களின் கிரகங்களின் சேர்க்கை நிகழும். இந்த கிரக சேர்க்கைகள் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 24 ஆம் தேதி புதன் ஒரு வருடம் கழித்து மிதுன ராசிக்குள் நுழைந்தார். இதனால் எதிர் ராஜயோகமான விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், இந்த விபரீத ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிப்பதோடு, தொழிலில் முன்னேற்றமும் ஏற்படப் போகிறது. இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது அற்புதமான பலன்களை அளிக்கவுள்ளது. குறிப்பாக இந்த யோகத்தால் வெளிநாட்டில் இருந்து சில நன்மைகளைப் பெறக்கூடும். மாணவர்கள் இக்காலத்தில் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். தொழிலதிபர்கள் கடன் வாங்கினாலும், தொழில் அமோகமாக செல்லும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் பண ஆதாயத்தைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது நற்பலன்களை அளிக்கும். இதுவரை தேவையற்ற செலவுகளை செய்து வந்தால், இனிமேல் அந்த செலவுகள் கட்டுப்படும். திடீரென்று நல்ல பண வரவைக் காணக்கூடும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் மங்களகரமாக இருக்கும். ஆனால் கேதுவின் 9 ஆவது பார்வை விழுகிறது. இதனால் கடுமையான உடல் வலியை சந்திக்கக்கூடும். ஆனால் பண வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். முக்கியமாக பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கப் போகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது அற்புதமாக இருக்கும். ஏதேனும் நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், அதில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் தைரியம் இன்னும் அதிகமாக இருக்கும். கடன் ஏதேனும் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் திருப்பி செலுத்திவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் எதிரிகளை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications