Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்!
சூரியன், செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: செப்டம்பர் 17 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Sun Mars Made Shadashtak Yoga On September 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவகிரகங்களின் தலைவனான சூரியன் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகிறார். இதனால் கன்னி ராசியில் செவ்வாய் மற்றும் சூரியனும் சேர்ந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த ஷடாஷ்டக யோகமானது ஒரு அசுப யோகம். ஜோதிடத்தின் படி, ஷடாஷ்டக யோகமானது இரண்டு கிரகங்கள் 6 மற்றும் 8 ஆவது வீட்டில் இருக்கும் போது உருவாகிறது. இந்த முறை ஷடாஷ்டக யோகமானது செவ்வாய் மற்றும் சூரியனின் நிலையால் உருவாகியுள்ளது. இந்த அசுப யோகத்தால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஷடாஷ்டக யோகமாது மேஷ ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை வழங்கவுள்ளது. ஏனெனில் சூரியனும், செவ்வாயும் 6 ஆவது வீட்டில் இணையவுள்ளார்கள். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற வழக்குகள் இக்காலத்தில் தொந்தரவு அளிக்கலாம். வியாபாரம் செய்பவர்கள் பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அப்பணத்தை திரும்ப பெற முடியாது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். முக்கியமாக தாயாரின் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளதால், அவர்களை கூடுதல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த காலத்தில் பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும் மோசமாக வாய்ப்புள்ளது. முக்கியமாக அவர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களை கவனமாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ஷடாஷ்டக யோகமானது ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கர்ப்பிணியாக இருந்தால், கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. கர்ப்பத்தில் ஏற்கனவே பிரச்சனையைக் கொண்டவர்கள், சிறு பிரச்சனையை சந்தித்தாலும் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைகளால் சில கெட்ட செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். ஷடாஷ்டக யோகத்தின் மோசமான தாக்கத்தைக் குறைக்க சூரியனையும், செவ்வாயையும் வழிபடுவதோடு, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் விரதமிருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications