Latest Updates
-
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகியுள்ள ஆதித்ய மங்கள யோகம்: இந்த 3 ராசியின் நிதி நிலை உயரப்போகுது..
Sun Mars Made Aditya Mangal Yog 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அதனால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவானின் ராசியான மகர ராசியில் சூரியன் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 05 ஆம் தேதி, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் மகர ராசியில் நுழைந்துள்ளார். இதனால் மகர ராசியில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது.

மேலும் இச்சேர்க்கையால் ஆதித்ய மங்கள யோகமும் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவதோடு, நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வணிகர்கள் வழக்கத்தை விட நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலர் சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலர் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தைரியம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் உயரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் ஆதித்ய மங்கள யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலைகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மேலும் இக்காலத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications