Latest Updates
-
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
வார ராசிபலன் (28 June 2026-04 July 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது..! -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
1 வருடத்திற்கு பின் கன்னியில் சூரியனும், செவ்வாயும் இணைவதால் இந்த 3 ராசிக்கு நிறைய பணம் கிடைக்கும்..
Sun Mars Conjunction In Virgo: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் கன்னி ராசியில் பயணித்து வருகிறார்.
இப்படி கன்னி ராசியில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது ஒரு வருடத்திற்கு பின் நிகழ்ந்துள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதுவும் சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு நற்பலனை வாரி வாங்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் நல்ல பண பலன்களையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இக்காலத்தில் இவர்கள் போடும் திட்டங்கள் நல்ல வெற்றி அடையும். தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை அசால்ட்டாக வீழ்த்தி வெற்றி காண்பார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். இதனால் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. ஆகவே இக்காலத்தில் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் நல்ல வேலையைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் உடன் பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வணிகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications