Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
கன்னி ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை: செப்டம்பர் 17 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது..
Sun Mars Conjunction In Virgo: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. அப்படி கிரக சேர்க்கைகள் நிகழும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வீரம் மற்றும் தைரியத்தின் காரணியான செவ்வாய் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.

இதனால் செப்டம்பர் 17 முதல் கன்னி ராசியில் செவ்வாய், சூரியனின் சேர்க்கை நிகழவுள்ளது. செவ்வாயும், சூரியனும் நண்பர்கள் என்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் நல்ல பண வரவையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய், சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.
நம்பிக்கையானவர்களை அதிகம் சம்பாதிப்பார்கள். முக்கியமாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சானது மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் செப்டம்பர் 18 முதல் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
ஆசைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவதோடு, நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரத்தைப் பெறக்கூடும். வணிகர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.
பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் வெற்றிகரமானதாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications