Latest Updates
-
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்...
1 வருடத்திற்கு பின் விருச்சிகத்தில் நிகழும் சூரிய செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது..
Sun Mars Conjunction In Scorpio After 1 Year: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றிக் கொண்டிருப்பதோடு, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரியன். அதே வேளையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் நவம்பர் 17 ஆம் தேதி, அதாவது இன்று முதல் ஒன்றிணைந்து விருச்சிக ராசியில் பயணிக்கவுள்ளன.

செவ்வாயின் சொந்த ராசியிலேயே இவ்விரு கிரகங்களின் சேர்க்கைகளும் நிகழ்வதால், இதன் தாக்கம் சற்று சிறப்பானதாக இருக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த கிரக சேர்க்கையால் நல்ல நிதி நன்மைகளையும், நிறைய வெற்றிகளையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். மேலும் வழக்கத்தை விட இக்காலத்தில் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடனான உறவு வலுவாக இருக்கும். ஊடகம், இசை, மாடலிங், மார்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் போடப்படும் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமானதாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதலித்துக் கொண்டிருந்தால், உங்கள் காதல் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். மாணவர்கள் பெரிய கல்வி நிறுவனத்தில் படிப்பைத் தொடரும் வாய்ப்பைப் பெறுவார்கள். மொத்தத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத துணையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
வெளிநாட்டில் இருந்து சில நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு வேலை செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications