Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
1 வருடம் கழித்து தனுசு ராசியில் நிகழும் செவ்வாய் சூரியன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
Sun Mars Conjunction In Sagittarius On December 2023: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கை மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனான சூரியன் தற்போது தனுசு ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் டிசம்பர் 27 ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைகிறார். இதனால் தனுசு ராசியில் செவ்வாய் சூரியன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையானது இந்த ராசியில் 1 வருடத்திற்கு பின் நிகழ்கிறது.

இந்த சூரியன் செவ்வாய் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது அற்புதமான பலன்களை வாரி வழங்கப் போகிறது. இப்போது 1 வருடத்திற்கு பின் தனுசு ராசியில் நிகழும் செவ்வாய் சூரியன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த தைரியம் மற்றும் தன்னம்பிக்கையால் உங்கள் வாழ்க்கையில் சில சாதனைகளைப் புரிவீர்கள். எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தைரியமாக ரிஸ்க்குகளை எடுத்து, அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்கார்களின் தைரியம் அதிகரிக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற செலவுகள் இக்காலத்தில் கட்டுப்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications