Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்..
சூரியன் செவ்வாய் சேர்க்கை: அக்டோபர் 18 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும்...
Sun Mars Conjunction In Libra On 18 October 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அப்படி பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனான சூரியனும், தளபதியான செவ்வாயும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.
அதுவும் இந்த சேர்க்கையானது அக்டோபர் 18 ஆம் தேதி நிகழவுள்ளது. ஏற்கனவே அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் செவ்வாய் நுழைந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 18 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் துலாம் ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது.

சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், இதன் தாக்கம் சற்று சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் திடீர் பண வரவையும், தொழிலில் சிறப்பான முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் திடீர் பண வரவைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஊடகம், மார்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் நற்பலனைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த சேர்க்கை காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். எதிரிகளை அசால்ட்டாக வீழ்த்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பானதாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் இக்காலத்தில் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்பட போகிறது. சிலரால் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய முதலீடுகளால் நல்ல பலனைப் பெறக்கூடும். குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெற வாய்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications