Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஒரு வருடத்திற்கு பின் சிம்ம ராசியில் நிகழும் சூரிய-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Sun Mars Conjunction In Leo On August 2023: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றும். கிரகங்களின் ராசி மாற்றங்களானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் உருவாவதுண்டு. அப்படி உருவாகும் கிரக சேர்க்கைகளின் தாக்கமும் 12 ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதுவும் 12 மாதங்களுக்கு பின் சிம்ம ராசிக்குள் சூரியன் நுழைகிறார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கிரகங்களின் தளபதியான செவ்வாய் பயணித்து வருகிறார்.
இதனால் சிம்ம ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது நற்பலனை வழங்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இச்சேர்க்கை காலமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் உயர்வு ஏற்படலாம்.
முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். குடும்ப சூழல் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசை நிறைவேறும். திடீரென்று கையில் பணம் அதிகம் சேரும். பேச்சால் பல முக்கிய காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரத்தைப் பெறவுள்ளார்கள். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் தொழிலை விரிவுப்படுத்தும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குறிப்பாக பெரிய பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இச்சேர்க்கை காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். வேலைகள் அனைத்தும் வேகமாகவும், வெற்றிகரமாகவும் நடக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது. நல்ல பண வரவு இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வர வாய்ப்புள்ளது. குடும்பத்தினரின் முழு ஆதரவும் இக்காலத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications