Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
மகரத்தில் நிகழும் சூரியன் செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்...
Sun Mars Conjunction In Capricorn 2024: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதேப் போல் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன்.
தற்போது சூரியனும், செவ்வாயும் தனுசு ராசியில் ஒன்றிணைந்து பயணித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 15 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்குள் நுழைந்தார். அதன் பின் பிப்ரவரி 5 ஆம் தேதி செவ்வாய் மகர ராசியில் நுழைகிறார். இதனால் மகர ராசியில் சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கை மீண்டும் நிகழ்கிறது.

சனி பகவானின் ராசியான மகரத்தில் சூரியனும், செவ்வாயும் ஒன்றிணைந்து பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது நற்பலன்களை வாரி வழங்கவுள்ளது. இப்போது மகர ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழ்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சொல்லப்போனால் இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கு. தொழிலைப் பொறுத்தவரை, நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.
பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வைக் காண்பீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். சிலர் சுற்றுலா செல்ல வாய்ப்புக்களைப் பெறலாம்.
சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளும் நல்ல லாபத்தைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி காண்பார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











