Latest Updates
-
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
சூரியனால் உருவான தன ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வமும், கௌரவமும் உயரப் போகுது...
Dhan Rajyoga 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்கள் ராசியை மாற்றும் போதோ, மற்ற கிரகங்களுடன் சேரும் போதோ, குறிப்பிட்ட வீடுகளில் இருக்கும் போதோ சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களால் மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், 12 மாதங்களுக்கு பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சிம்ம ராசியில் சூரியன் நுழைந்ததும், மிகவும் மங்களகரமான தன ராஜயோகமானது உருவானது.

இந்த யோகம் நல்ல செல்வத்தையும், புகழையும், கௌரவத்தையும் தரக்கூடியது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த தன ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இக்காலத்தில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். பண பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்க்கையின் தரம் மேம்படும்.
சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது அபரிமிதமான நற்பலனை வழங்கும். தைரியம் அதிகம் நிறைந்திருக்கும். மாணவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்பவர்கள் வெற்றியைக் காண்பார்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, விரிவாக்கம் செய்யவும் வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி ரீதியாக, மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தன ராஜயோகமானது அனைத்து விதத்திலும் சிறப்பாக இருக்கும். சூரியனின் அருளால் இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் மற்றும் மிகுந்த ஆற்றலுடன் இருப்பார்கள்.
அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய தொடர்பால் தொழிலில் கணிசமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதியைப் பொறுத்தவரை, கையில் பணம் அதிகம் புரளும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications