Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
சூரியனால் உருவான தன மற்றும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Made Dhan And Budhaditya Rajyog: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். 12 மாதங்களுக்கு பின் சூரியன் தனது சொந்த ராசிக்கு சென்றிருப்பது மிகவும் சிறப்பானது மற்றும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் நுழையும் போது, புதன் சிம்ம ராசியில் இருந்ததால், புதாதித்ய ராஜயோகம் உருவானது. அதோடு தன ராஜயோகமும் உருவானது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தன மற்றும் புதாதித்ய ராஜயோகமானது சிறப்பான பலன்களை வழங்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதாதித்ய மற்றும் தன ராஜயோகங்களானது அபரிமிதமான பண பலன்களை வழங்கும். ராசிநாதன் முதல் வீட்டில் இருப்பதால், இக்காலத்தில் உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சமூகத்தில் நல்ல செல்வாக்கு உள்ளவர்களுடன் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிறிது மன கசப்புகள் ஏற்படலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு புதாதித்ய, தன ராஜயோகங்களானது நினைத்துப் பார்க்காத வகையில் நன்மைகளை வழங்கும். இக்காலத்தில் இந்த ராசிக்கார மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றி பெறுவார்கள். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதலித்து வந்தால், அதிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications