Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சூரியனால் உருவான தரித்திர யோகம்: அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Sun Made Daridra Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். மற்றும் அந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஜூலை மாதத்தில் சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழைந்தார்.
கடக ராசிக்குள் சூரியன் நுழைந்ததால், மிகவும் மோசமான மற்றும் அசுபமான தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். முக்கியமாக இந்த யோகமானது நற்பலனை விட கெடுபலனையே தரும்.

மேலும் தரித்திர யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் பண இழப்புக்களை சந்திப்பதோடு, உறவுகளில் விரிசலை சந்திக்கக்கூடும். இப்போது அந்த 3 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தரித்திர யோகமானது தீங்கை விளைவிக்கும். இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உடன் வேலை செய்வோரின் ஆதரவு சற்று குறைவாகவே இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கக்கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு தரித்திர யோகமானது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதோடு தாயாரின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் ஏதேனும் ஒரு நோயால் அவதிப்படக்கூடும்
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் தரித்திர யோகத்தால் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு புதிய வேலைகளையும் இக்காலத்தில் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் ஆகஸ்ட் 16 வரை இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications