Latest Updates
-
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
சூரியன் கேதுவால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Sun Ketu Made Navpancham Rajyog: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் கிரகங்களின் ராசி மாற்றங்களினால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும்.
அந்த வகையில், சூரியன் மே 14 ஆம் தேதி சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். இந்த ரிஷப ராசியில் குரு பகவான் அஸ்தமன நிலையில் உள்ளார். மறுபுறம் கேது கன்னி ராசியில் அமைந்துள்ளார். இதனால் சூரியனுக்கும், கேதுவிற்கும் இடையே நவபஞ்ச யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும் மற்றும் சில ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாகவும் இருக்கும். இப்போது நவபஞ்ச யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது மிகவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். முக்கியமாக தொழிலில் நல்ல பலன்களைப் பெறக்கூடும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களின் சிறப்பான வேலையால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகம் பயனுள்ளதாக இருக்கும். இந்த யோகத்தால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு இந்த யோகத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
அரசு வேலை செய்பவர்கள் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நடந்து வந்த நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் அதை முயற்சித்தால் நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்கும். வியாபாரிகள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் அந்த கடின உழைப்புக்கான பலனை நிச்சயம் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications