Latest Updates
-
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
12 ஆண்டுகளுக்கு பின் சூரியன் குரு உருவாக்கிய நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Sun Jupiter Made Navpancham Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சூரியன் மற்றும் குரு பகவானின் நிலைகளால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகியுள்ளது.

இப்படிப்பட்ட யோகம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. இந்த நவபஞ்சம் யோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அற்புதமான பலன்களை வாரி வழங்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குருவும், 9 ஆவது வீட்டில் சூரியனும் உள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நல்ல பண வரவும் கிடைக்கும். உயர் கல்வி பயில வேண்டுமென்ற மாணவர்களின் கனவு நிறைவேறும்.
பணிபுரிபவர்களுக்கு இந்த யோக காலம் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோகமானது பல நன்மைகளை வழங்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் உதவியால் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications