Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்!
10 ஆண்டுகளுக்கு பின் குரு சூரியன் உருவாக்கும் சதுர்தசம் யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்...
Sun Jupiter Made Chathur Dasham Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் 2024 ஜனவரி 15 ஆம் தேதி சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்தார். அதே வேளையில் சந்திரன் ஜனவரி 15 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் சூரியனும், குருவும் 4 மற்றும் 10 ஆவது வீடுகளில் இருப்பார்கள். இதன் விளைவாக சூரியன் மற்றும் குருவால் 10 ஆண்டுகளுக்கு பின் நான்காம் பத்தாம் யோகமான சதுர்தசம் யோகம் உருவாகிறது.

இப்படி உருவாகும் யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிஷ்டத்தின் முழு ஆதரவால் பண மழை கொட்டப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சதுர்தசம் யோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக இந்த யோகத்தால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். சிலர் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க முடிவெடுக்கலாம். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சதுர்தசம் யோகம் எதிர்பாராத நன்மைகளை வழங்கும். குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இநத யோக காலத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சதுர்தசம் யோகம் சாதகமான பலன்களை அளிக்கும். முக்கியமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்து வந்தால், அதை விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களு கூட்டாளருடனான உறவு இன்னும் சிறப்பாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் பண மழையில் நனைவீர்கள். சிலர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications