Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
12 ஆண்டுகளுக்கு பின் மேஷ ராசியில் குரு சூரிய சேர்க்கை: ஏப்ரல் 22 முதல் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்க போகுது!
Sun Jupiter Conjunction In Aries: நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். சில சமயங்களில் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, கிரக சேர்க்கைகள் நிகழக்கூடும். கிரக சேர்க்கை என்பது ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றாக இணைந்து பயணிப்பதாகும்.
அந்த வகையில் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் தமிழ் புத்தாண்டானா சோபகிருது வருடம் பிறக்கிறது. அதைத் தொடர்ந்து 2023 ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைகிறார். இதனால் ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசியில் குரு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையானது 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. எனவே இதன் சிறப்பு தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

இருப்பினும், குரு சூரிய சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் நல்ல செல்வத்தையும், முன்னேற்றத்தையும் பெறப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் சூரிய குரு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்புள்ளது. ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளால் நற்செய்திகளை பெறக்கூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.
திடீர் பணவரவிற்கான வாய்ப்புள்ளது. இதுவரை தேவையில்லாமல் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தால், இந்த சேர்க்கைக்கு பின் அந்த செலவுகள் கட்டுப்படும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான காலமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய குரு சேர்க்கை நிகழ்கிறது. இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்கள் அல்லது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
உங்களின் பேச்சு இக்காலத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வைப் பெறக்கூடும். வெளிநாடு செல்ல விருப்பம் கொண்டவர்கள், இக்காலத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications