Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Sun Jupiter Conjunction In Aries From April 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது கிரகங்களின் சேர்க்கையும் நிகழும். அப்படி நிகழும் கிரக சேர்க்கைகளுள் சில பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கழித்து நிகழலாம்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஏப்ரல் 13 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைந்தார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசியில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கை சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ளது. இந்த சேர்க்கை மே 01 ஆம் தேதி வரை இருக்கும்.

ஏனெனில் மே 01 ஆம் தேதி குரு ராசியை மாற்றவுள்ளார். மேஷ ராசியில் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கையானது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரவுள்ளது. இப்போது மேஷத்தில் உருவாகியுள்ள குரு சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். செல்வம் பெருகும். சமூகத்தில் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் முதலீடுகளால் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் உள்ள சண்டைகள் அனைத்தும் தீரும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு சூரிய சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பேச்சால் பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications