Latest Updates
-
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கும்..
Sun Enters Own Nakshatra On September 2023: ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன், தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் தனது சொந்த நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
ஜோதிடத்தின் படி, சூரியனின நட்சத்திர பெயர்ச்சியானது செப்டம்பர் 14 ஆம் தேதி நிகழவுள்ளது. சூரியன் தனது சொந்த ராசியில் இருப்பதோடு, தனது சொந்த நட்சத்திரத்திலும் பயணிப்பதால், இக்காலத்தில் சூரியன் பன்மடங்கு நற்பலனை வாரிவழங்குவார்.

அதுவும் ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருந்தால், இக்காலத்தில் சூரியனைப் போன்று அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து பல நன்மைகளையும், நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். அதோடு தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன்கள் அதிகம் நிறைந்து இருப்பார்கள்.
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்?
ஜோதிடத்தின் படி, உத்திர நட்சத்திரமானது 12 ஆவது நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசியில் வருகிறது. மீதமுள்ள 3 பாதங்கள் கன்னி ராசியில் வருகிறது. உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் துணிச்சலானவர்களாகவும், தைரியமானவர்களாகவும், ஆயுதங்களை கையாள்வதில் கைதேர்ந்தவர்களாகவும், மிகவும் மென்மையாக பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
அதே சமயம் இவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். இவர்களுக்கு கோபம் சட்டென்று வரும். கடினமாக உழைக்கக்கூடியவர்கள் மற்றும் நன்கு படித்து சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு ஆசிரியர், அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகள் வேலை செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இப்போது சூரியன் உத்திரம் நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போன்று பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிகவும் சிறப்பான பலனைப் பெறுவார்கள். குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுகூர்கள். தேர்வுகளில் உங்கள் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவார்கள். இக்காலத்தில் வணிகர்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு புதிய ஒப்பந்தமும் நற்பலனை வழங்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இக்காலம் இனிமையாக இருக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால், இப்பெயர்ச்சியானது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இக்காலத்தில் நம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்க சிறிதும் தயக்கம் கொள்ளமாட்டீர்கள். குடும்பத்தில் உங்கள் நிலை உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் உடன் வேலை செய்வோரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இக்காலத்தில் அதிர்ஷடத்தின் ஆதரவால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம் மற்றும் அலுவலகத்தில் நற்பெயர் மற்றும் மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு வேலை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications