Latest Updates
-
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
100 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக நிகழும் சனி, சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது..
Sun And Saturn Nakshatra Transit On January 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அப்படி ஏற்படும் மாற்றங்களின் போது, 12 ராசிகளிலுமே அதன் தாக்கம் தெரியும்.
நவகிரகங்களில் சூரியனும், சனியும் எதிரி கிரகங்களாக கருதப்பட்டாலும், இருவருக்கு இடையே தந்தை மகன் உறவு உள்ளது. இதில் சூரியன் மாதம் ஒருமுறை ராசிறை மாற்றுவார். சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இந்நிலையில் சூரியனும், சனி பகவானும் ஒரே நாளில் நட்சத்திரங்களை மாற்றுகிறார்கள். அதில் சூரியன் உத்திராடம் நட்சத்திரத்திற்கும், சனி சதய நட்சத்திரத்தின் இரண்டாவது கட்டத்திற்கும் செல்கின்றனர். இப்படியான நட்சத்திர பெயர்ச்சி ஜனவரி 11 ஆம் தேதி நிகழ்கிறது. அதுவும் 100 ஆண்டுகளுக்கு பின் இம்மாதிரியான நிகழ்வு நிகழ்கிறது.
சனியும், சூரியனும் ஒரே ராசியை நட்சத்திரத்தை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிப்பதோடு, ஏராளமான அளவில் செல்வம் கிடைக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்
துலாம்
சூரியன் மற்றும் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறப் போகிறது. புதிய வேலைகளைத் தொடங்க இக்காலம் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். காதல் உறவுகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது நன்மைகளைத் தரும். எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சிலர் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாப்ம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைத்தால், அதை இக்காலத்தில் செய்தால், எதிர்பார்த்த லாபத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications