சூரியன்-புதன் இணைவதால் உருவாகும் புதாத்யா யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜவாழ்க்கையை கொடுக்கப்போகுதாம்...!

Sun and Mercury Conjunction: மே மாதத்திற்குப் பிறகு, பல முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றத் தயாராக இருப்பதால், ஜூன் மாதம் கிரக இயக்கங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கப்போகிறது. குறிப்பாக, சூரியன் மற்றும் புதன் இரண்டும் மிதுன ராசிக்கு மாறப்போகிறது.

புத்திசாலித்தனம், பகுத்தறிவு மற்றும் நட்பு போன்ற பண்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட புதன், பெரும்பாலும் கிரகங்களில் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது, ஜூன் 14, 2024 அன்று காலை 10:55 மணிக்கு மிதுன ராசியில் இந்த பெயர்ச்சி நடக்கப் போகிறது. அதேசமயம் கிரகங்களின் ராஜாவான சூரியன், கௌரவம், உயர் அந்தஸ்து மற்றும் தலைமைப் பண்புகளைக் குறிக்கிறது. ஜூன் 15, 2024 அன்று மதியம் 12:16 மணிக்கு மிதுன ராசியில் நுழைகிறார்.

Sun and Mercury Conjunction In Gemini Will Bring Luck To These Zodiac Signs in Tamil

இதனால் மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவது சுப புதாதித்ய யோகத்தை உருவாக்கும். மிதுனத்தில் இந்த இணைப்பின் செல்வாக்கு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த கிரக பெயர்ச்சி ராஜயோகத்தைக் கொடுக்கப்போகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் புதன் இணைவதால் பல்வேறு நன்மைகளை எதிர்பார்க்கலாம். இந்த கட்டத்தில், அவர்கள் தனிப்பட்ட ஆடம்பரமான வாழ்க்கையில் ஈடுபடுவார்கள், இது ஒரு நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். நிதிரீதியாக, அவர்கள் போதுமான செல்வத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பப் பயணங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான தனிமையான நேரம் மன ஆறுதலை அளிக்கும்.

இந்த காலகட்டம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகர்களுக்கு நல்லது, அதிக லாபத்திற்கான சாதகமான வாய்ப்புகள் உள்ளன. வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் முன்னேற்றம் அல்லது சம்பள உயர்வுக்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்புகளைப் பெறலாம். மேலும் சூரியன் மற்றும் புதனின் நேர்மறையான செல்வாக்கு அவர்களின் சமூக வட்டங்களை வளப்படுத்தும், புதிய நட்புகளை உருவாக்க உதவும்.

மிதுனம்

மிதுன ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால், ஜூன் மாதம் முழுவதும் பல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலகட்டம் அனைத்து பக்கங்களில் இருந்தும் வெற்றியை உறுதியளிக்கிறது. அவர்களின் நீண்ட கால நிதி சிக்கல்கள் சுமூகமாகத் தீர்க்கப்படும், மேலும் புதனின் செல்வாக்கு அவர்களுக்கு கவர்ச்சிகரமான பேச்சாற்றலைக் கொடுக்கும். சூரியனின் ஆதிக்கத்தால், உங்கள் சமூக நிலை உயரும், கவனத்தையும் மரியாதையையும் பெற்றுத்தரும்.

மேலும் அவர்களின் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். இந்த நேரத்தில் குடும்ப முரண்பாடுகள் தீரும், மேலும் ஆரோக்கிய விஷயங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கலாம். நிதிரீதியாக, மூதாதையர் சொத்துக்கள் மூலம் வலுவான அதிர்ஷ்டம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் புதன் இணைவது தனிப்பட்ட அதிர்ஷ்டத்தை உறுதி செய்கிறது, மேலும் நிதி ஸ்திரத்தன்மையை பலப்படுத்துகிறது. அனைத்து வாழ்க்கைப் பொறுப்புகளையும் சிறப்பாக நிர்வகிக்கும் திறனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நிதி சிக்கல்களை உங்களை நீண்ட காலம் துன்புறுத்திக் கொண்டிருந்தால், இந்தக் காலகட்டம் உங்களுக்கு புதிய வருமானங்களைக் கொடுக்கு.

விடாமுயற்சியுடன் கூடிய முயற்சிகள் அற்புத பலனைத் தரலாம், மேலும் இது உங்கள் வருவாயை அதிகரிக்கும் மற்றும் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். சூரியனின் தாக்கம் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்கும். கூடுதலாக, உங்களின் பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும், அதிர்ஷ்டம் உங்கள் முயற்சிகளுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடனான உறவுகள் செழித்து, பரஸ்பர வளர்ச்சியையும், ஆதரவையும் வளர்க்கும்.

கன்னி

மிதுனத்தில் சூரியன் மற்றும் புதன் இணைவதால், கன்னி ராசிக்காரர்கள் ஜூன் மாதம் முதல் அவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம். அவர்களின் சமூக அந்தஸ்து உயரும், வேலையில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க தொழில் முன்னேற்றங்கள், சாத்தியமான சம்பள உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரியல் எஸ்டேட் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருமானம் ஈட்ட வாய்ப்புகள் உருவாகலாம். மேலும், சில கன்னி ராசிக்காரர்கள் முந்தைய முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் மூலம் லாபம் பெறலாம். தாம்பத்திய உறவுகளில் அன்பும் பாசமும் நிறைந்திருக்கும். உங்கள் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விருப்பங்களையும் நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, May 31, 2024, 23:29 [IST]
Desktop Bottom Promotion