Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
சப்பாத்திக்கு ஏற்ற க்ரீமி பன்னீர் சோயா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஆர்சிபி வெற்றிக்கு பிறகு விராட் - அனுஷ்கா ஆடிய டான்ஸ்! இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் வீடியோ இதோ! -
சாணக்கிய நீதி படி இந்த 2 பழக்கங்கள் உங்களின் விதியையே மாற்றும் சக்தி உள்ளவையாம் - என்னென்ன பழக்கங்கள் தெரியுமா -
வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய் - இவற்றில் தலைமுடி வளர்ச்சிக்கு சிறந்தது எது?
தங்க அரண்மைனை, தங்க கார், தங்க விமானம், 16 லட்சத்திற்கு ஹேர்கட் என உலகையே கலக்கும் இவர் யார் தெரியுமா?
மாதமொரு முறை அல்லது இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை முடிவெட்டுவதை நாம் வழக்கமாக வைத்திருப்போம். 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நாம் நம்முடைய முடியை வெட்டுவதற்காக செலவழிப்போம். ஆனால் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத தொகையை ஒருவர் ஒவ்வொரு முறை முடி வெட்டுவதற்கும் செலவழித்து வருகிறார்.
அவர் வேறு யாருமில்லை, புரூனேவின் சுல்தானான ஹசனல் போல்கியாதான். லண்டனில் உள்ள ஒரு முடிதிருத்தும் தொழிலாளி, புருனே சுல்தானின் தலைமுடியை வெட்டுவதற்கான $20,000 டாலர்கள் செலவழிக்கிறார், இதன் இந்திய மதிப்பு 16 இலட்சமாகும்.

மேஃபேயரில் உள்ள டார்செஸ்டர் ஹோட்டலில் முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் கென் மொடெஸ்டௌ, ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் அரச குடும்பத்தாரால் அழைத்துச் செல்லப்படுகிறார், ஒருமுறை சுல்தானுக்காக முடிவெட்ட அவர் 7000 மைல் பயணம் செய்து வருகிறார். மேலும் மற்றவர்களின் மூலம் எந்த தொற்றுநோயும் பரவாமல் இருக்க அவர் முதல்தர வகுப்பில் அழைத்து வரப்படுகிறார்.
கென் ஒவ்வொரு முறை சுல்தானுக்கு முடி வெட்ட வரும்போதும் அவருடைய ஆடம்பர பயணம், தங்குவதற்கான செலவு, உணவு என அனைத்தும் சுல்தானின் செலவில்தான் செய்யப்படுகிறது. 17பில்லியனுக்கு மேல் சொத்து கொண்ட சுல்தானுக்கு இது பெரிய செலவாக இருக்காது.
மொடெஸ்டௌவுடன் பணிபுரியும் ஜார்ஜ் காடியின் கூற்றுப்படி, ஒவ்வொரு முறையும் அரச குடும்பத்திற்கு தனது சேவைகளை வழங்கும்போது, விமானம் மற்றும் ஹோட்டல் தங்குமிடத்துடன் மூன்று முதல் நான்கு இரவுகள் வரை மொடெஸ்டூ பல ஆயிரம் டாலர்களை ரொக்கமாகப் பெறுகிறார்.
லண்டனில், முடிதிருத்துவதற்கு கென் வெறும் £30 மட்டுமே வசூலிக்கிறார். மொடெஸ்டௌ 16 ஆண்டுகளாக சுல்தானின் தலைமுடியை வெட்டி வருகிறார், சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒருமுறை செல்கிறார் என்று பிரபல நாளிதழ் கூறுகிறது. சுல்தானின் ஆடம்பர வாழ்க்கையில் இது ஒரு துளி மட்டுமே.
சுல்தானின் வீடு
சுல்தானின் வீடு, இஸ்தானா நூருல் இமான் அரண்மனை, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாட்டின் சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் 1984 இல் கட்டப்பட்டது. 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில், உலகின் மிகப்பெரிய அரண்மனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த அரண்மனையின் டூமானது 22 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஹசனல் போல்கியாவின் இஸ்தானா நூருல் இமான் அரண்மனையின் மதிப்பு 2550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் ஐந்து நீச்சல் குளங்கள், 257 குளியல் அறைகள் மற்றும் 1700 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 110 கேரேஜ்களுடன் கூடுதலாக 200 குதிரைக் கொட்டகைகள் ஏர் கண்டிஷனில் உள்ளன.
தங்க விமானம்
ல்தான் தனது சொந்த உபயோகத்திற்காக போயிங் 747 விமானத்தில் சுமார் 3,000 கோடி ரூபாய் ($400 மில்லியன்) முதலீடு செய்ததாகக் கூறுகிறது. சுவாரஸ்யமாக, அவர் கூடுதலாக $120 மில்லியன் மதிப்புள்ள தங்க வாஷ்பேசின் போன்ற கூடுதல் பொருட்களையும் சேர்த்தார். போல்கியா தனது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக ஏர்பஸ் ஏ340 விமானத்தை வழங்கினார்.
தங்க ரோல்ஸ் ராய்ஸ்
தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய அரிய வாகனங்களின் தொகுப்பை புருனே சுல்தான் வைத்துள்ளார். அறிக்கைகளின் படி, புருனேயின் 29வது சுல்தான் கிட்டத்தட்ட 7,000 வாகனங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
300 ஃபெராரிகள் மற்றும் 500 ரோல்ஸ் ராய்ஸ்கள் ஹசனல் போல்கியாவின் ஆட்டோமொபைல்களின் சேகரிப்பில் அடங்கும். புருனேயின் சுல்தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ், வாகனத்தின் மேலே அமர்ந்திருக்கும் குடைக்கு இடமளிக்கும் வகையில் திறந்த கூரையுடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications
