Latest Updates
-
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...!
சூர்யா-ஜோ முதல் விக்கி-நயன் வரை: முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட தென்னிந்திய பிரபலங்கள்!
Anant Ambani-Radhika Merchant's Wedding: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரும், இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி மற்றும் நீத்தா அம்பானி அவர்களின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நேற்று, அதாவது ஜூலை 12 ஆம் தேதி கோலாகலமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் வோர்ல்ட் கன்வெஷன் சென்டரில் நடைபெற்றது.
முகேஷ் அம்பானி இந்த திருமணத்தை உலகமே வியந்து பார்க்கும் அளவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். சொல்லப்போனால் இந்த திருமண விழாவானது 6 மாதங்களுக்கு முன்பிருந்தே நடைபெற்று வருகிறது மற்றும் அனைவராலும் பேசப்பட்டும் வருகிறது.

முகேஷ் அம்பானி இந்த திருமணத்திற்கு இந்திய பிரபலங்களை மட்டுமின்றி, உலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இந்த திருமண விழாவிற்கு உலகளவில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டு, திருமணத்தை சிறப்பானதாக மற்றும் அனைவரும் பேசும்படியாக்கினர். சொல்லப்போனால் நேற்று முதலாக சமூக வலைதளங்களில் அம்பானி வீட்டு திருமணம் தான் வைரலாக உள்ளது.
இந்த பிரம்மாண்டமான திருமண விழாவில் தென்னிந்தியாவில் இருந்தும் பல பிரபலங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். கீழே அம்பானி வீட்டு திருமண விழாவிற்கு கலந்து கொண்ட தென்னிந்திய பிரபலங்கள் மற்றும் அவர்களின் ஸ்டைல்கள் குறித்து காண்போம்.
ரஜினிகாந்த்
முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். இந்த நடன வீடியோ இணையத்தில் வைரலாகியும் உள்ளது.
ராம் சரண் மற்றும் உபாசனா
டோலிவுட் நடிகர் ராம்சரண் தனது மனைவி உபாசனாவுடன் ஜோடியாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்து கொண்டார்.
அட்லீ மற்றும் ப்ரியா
இயக்குநர் அட்லீ தனது காதல் மனைவி ப்ரியாவுடன் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அதுவும் இத்தம்பதிகள் பிங்க் ஷேடு ஆடைகளை அணிந்து க்யூட்டாக வந்திருந்தனர்.
ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தனது அன்பு மனைவியான நடிகை ஜெனிலியாவுடன் ஜோடியாக ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்து கொண்டார். அதில் ரித்தேஷ் சந்தன நிற ஷெர்வானியையும், ஜெனிலியா அவருக்கு மேட்ச்சாக அழகான புடவையையும் அணிந்து வந்திருந்தார்.
விக்னேஷ் மற்றும் நயன்தாரா
இயக்குநர் விக்னேஷ் தனது மனைவியும் நடிகையுமான நயன்தாராவுடன் அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்திருந்தார். அப்போது விக்னேஷ் பட்டு வேட்டியையும், சட்டையையும் அணிந்து வந்திருந்தார். நயன்தாரா கோல்டன் நிற புடவையை அணிந்து வந்திருந்தார்.
சூர்யா மற்றும் ஜோதிகா
நடிகர் சூர்யா மும்பையில் தனது குடும்பத்தினருடன் செட்டிலாகிவிட்டார். இவரும் தனது மனைவி ஜோதிகாவுடன் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது சூர்யா அழகாக பட்டு வேஷ்டி சட்டையை அணிந்திருந்தார். ஜோதிகா அழகாக பீச் கோல்டன் நிற காஞ்சிபுர பட்டுப்புடவையை அணிந்து, அதற்கு மேட்ச்சாக பச்சை நிற ஸ்டேட்மெண்ட் ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான்
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தனது மனையுடன் கலந்து கொண்டார். அப்போது ரகுமான் அவர்கள் நீல நிற ஷெர்வானி அணிந்திருந்தார்.



Click it and Unblock the Notifications


















