Latest Updates
-
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா?
178 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் அரிய சூரிய கிரகணம்: எந்த ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்?
Solar Eclipse On 14 October 2023: ஒவ்வொரு ஆண்டும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வதுண்டு. இது வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளாகும். அந்த வகையில் ஏற்கனவே இந்த ஆண்டின் முதல் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துவிட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி, அதாவது இன்று நிகழவுள்ளது. அதுவும் இந்த சூரிய கிரகணம் 178 ஆண்டுகளுக்கு பின் மகாளய அமாவாசை நாளில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாக நிகழ்கிறது.

வேத ஜோதிடத்தின் படி, கிரகணங்கள் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்லதாகவும், சிலக்கு மோசமானதாகவும் இருக்கும். இன்று நிகழவுள்ள சூரிய கிரகணமானது இந்திய நேரப்படி இரவு 11.29 மணிக்கு தொடங்கி சுமார் 5 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதாவது இந்த கிரகணம் இரவு 11.34 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால், சூதக் காலம் எதுவும் இல்லை.
ஆனால் இந்த சூரிய கிரகணம் வடஅமெரிக்கா, அர்ஜென்டினா, மெக்ஸிகோ, ஆன்டிகுவா, கனடா, பிரேசில், ஜமைக்கா, குவாத்தமாலா, கொலம்பியா, கியூபா, பார்படாஸ், பெர், உருகுவே, பராகுவே, பஹாமாஸ், ஹைட்டி போன்ற நாடுகளில் தெரியும். என்ன தான் இந்தியாவில் காணப்படாவிட்டாலும், ஜோதிடத்தின் படி இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரிவதாக கூறப்படுகிறது. இப்போது 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நிகழும் சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
சூரிய கிரகணத்தால், மேஷ ராசிக்காரர்களின் மனம் சற்று மோசமாக பாதிக்கப்படலாம். சிலர் நோய்களால் அவதிப்படக்கூடும். எனவே இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். அதோடு நிறைய செலவுகளையும் சந்திக்க நேரிடும். புத்திசாலித்தனமாக பணத்தை செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
சூரிய கிரகணத்தால் மிதுன ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். வாழ்க்கையில் பல விஷயங்கள் நடப்பதைக் காணலாம். மேலும் இந்த சூரிய கிரகணத்தால் வழக்கத்தை விட தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.
கடகம்
சூரிய கிரகணத்தால் கடக ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். எனவே ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இல்லாமல், சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. மனம் ஒருவித குழப்பத்துடன் இருக்கும். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புக்கள் ஏற்படும். ஆனால் முடிந்தவரை வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுவிடும்.
கன்னி
சூரிய கிரகணத்தால் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். சிலரது நிதி நிலைமை மோசமாகவும் வாய்ப்புள்ளது. சிலருக்கு பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது சற்று மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அரசியலில் இருந்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். வழக்கத்தை விட மனம் சற்று சோர்வாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் தங்கள் வாழ்க்கை குறித்த சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் நற்பலனைப் பெறுவார்கள். குறிப்பாக வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வழக்கத்தை விட மனம் சற்று ரிலாக்ஸாக இருக்கும்.
கும்பம்
சூரிய கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவடையும். பணிபுரிபவர்கள் இந்த கிரகணத்தால் விரும்பிய இடமாற்றத்தைப் பெறாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தால் வெற்றியைப் பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு இந்த கிரகணத்தால் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











