Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Solar Eclipse On 08 April 2024: ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் என மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். ஜோதிடத்தின் படி, கிரகணங்களானது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி நிகழ்ந்தது.
அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த கிரகணமானது முழு சூரிய கிரகணமாக இருக்கும். முக்கியமாக இந்த முழு சூரிய கிரகணம் சுமார் 54 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இதனால் இந்த கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

முக்கியமாக இந்த கிரகணத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது. இப்போது 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தால் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நல்ல நிதி நன்மைகளை வழங்கும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது சாதகமான பலன்களைத் தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது நற்பலன்களை வழங்கும். குறிப்பாக குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக இந்த காலத்தில் நிறைய பணத்தை சேமிக்கவும், சம்பாதிக்கவும் வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications