ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்களை ரொம்ப மோசமா பாதிக்கப் போகுது.. உங்க ராசி என்ன?

Solar Eclipse April 2023 Astrology: ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் என மொத்தம் நான்கு கிரகணங்கள் நிகழும். அதில் 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணமானது காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 மணி வரை இருக்கும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் சூதக் காலம் எதுவும் இல்லை.

சூரிய கிரகணத்தின் போது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம் ஆகும். ஜோதிடத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் போது சூரியன் மேஷ ராசியில் இருப்பார்.

Solar Eclipse April 2023 Astrology: Surya Grahan Effects on All Zodiac Signs in Tamil

சூரிய கிரகணத்தின் போது சூரியன் சற்று வலுவிழந்து இருப்பார் மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இப்போது 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திப்பார்கள். பணியிடத்தில் உங்களின் நிலை சற்று வலுவிழந்து இருக்கும். உடன்பிந்தவர்களுடனான உறவில் மனக்கசப்பு ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். திடீரென்று செலவு அதிகரிக்கும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளக்கூடும். ஆனால் குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் உள்ள ஒருவருடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலையை திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

கடகம்

கடக ராசியின் 10 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் கடக ராசிக்காரர்கள் சாதகமான பலன்களையே பெறுவார்கள். பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். பதவி உயர்வு அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக இந்த கிரகணம் நற்பலனை வழங்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் செல்வ நிலை இக்காலத்தில் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய மற்றும் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பண உதவி இக்காலத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் உறவுகளைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி

கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களின் பல்வேறு பிரச்சனைகள் இந்த காலத்தில் தீர்க்கப்படும். தொழிலில் ரிஸ்க் எடுத்தால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வணிகர்களுக்கு இக்காலம் நன்மைகளை வாரி வழங்கும் அற்புதமான காலமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 7 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். குடும்பத்தினருடனான உறவு மேம்படும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டு தொழில் செய்ய வாய்ப்புகள் கிடைக்கு. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலம் சவாலாக இருக்கும். புதிய வேலைகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் நிறைய போட்டியை எதிர்கொள்வார்கள். செலவுகள் அதிகரிக்கும். உறவுகள் பாதிக்கப்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு

தனுசு ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் சிரமங்களை சந்திக்க நேரிடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படுவதோடு, நிதி பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.

மகரம்

மகர ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. தொழில் காரணமாக வீட்டை விட்டு விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆரோக்கியம், வாகனம், சொத்து போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்காது. காதல் மற்றும் குடும்ப வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அலுவலக சூழல் மன அழுத்தம் நிறைந்திருக்கும்.

கும்பம்

கும்ப ராசியின் 3 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலம் சாதகமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஊடகத்தில் இருப்பவர்கள் நல்ல புகழைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றிகளைப் பெறுவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

மீனம்

மீன ராசியின் 2 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் பண இழப்பு மற்றும் பணப் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பெரிய முதலீடுகளை இக்காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

Desktop Bottom Promotion