Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: எந்த ராசிக்கு எப்படி இருக்கும்? இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..
Solar Eclipse 2024 On 08 April 2024: ஜோதிடத்தில் கிரகணங்கள் முக்கிய நிகழ்வுகளாக கருதப்படுகின்றன. ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம். இவற்றில் 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 08 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த கிரகணம் முழு சூரிய கிரகணமாக இருக்கும்.
கிரகண காலம் அசுப காலமாக கருதப்படுவதால், இந்த காலத்தில் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஜோதிடத்தின் படி, கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் கெடு பலனையும் பெற வாய்ப்புள்ளது. இப்போது 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை தொடங்குவதாக இருந்தாலும், நாளின் முதல் பாதி சாதகமாக இருக்கும். மேலும் நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள், இந்த கிரகணத்திற்கு பின் மெதுவாக நடக்கத் தொடங்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நன்மை தருவதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். அதாவது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய நண்பரை இக்காலத்தில் சந்திக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தால் கலவையான பலன்களைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய நினைத்தால், இந்த கிரகண காலத்தில் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புதிய வாகனத்தை வாங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்காது. வீட்டில் உள்ள பெரியவர்களை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணமானது நன்மைகளை வழங்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலையில் மட்டுமின்றி, ஆளுமையிலும் நல்ல மாற்றங்களைக் காண்பீரகள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் சிறப்பான தகவல் தொடர்பு திறன் மூலம் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். சுற்றியுள்ள அனைவரிடமும் கண்ணியமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் நற்பெயர் சமூகத்தில் அதிகரிக்கும். ஆனால் செலவுகள் சற்று அதிகரிக்கும் இதனால் உங்களின் சேமிப்பு பாதிக்கப்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் தன்னம்பிக்கை குறையும். புதிய வேலைகளைத் தொடங்க நினைப்பீர்கள். ஆனால் அது முடியாமல் போகும். குழப்பமான மனநிலை காரணமாக முடிவுகளை எடுப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். சற்று பொறுமையிழந்து இருப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் தங்கள் பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுகூர்கள். அலுவலகத்தில் கொடுத்த வேலைகளை விரைவில் முடிக்க முயற்சிப்பீர்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
சூரிய கிரகண நாளில் விருச்சிக ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், ஓரளவு லாபத்தைக் காணலாம். எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் தங்கள் வேலையில் பிஸியாக இருப்பார்கள். ஆனால் அலுவலகத்தில் அதிக வேலை காரணமாக மன அழுத்தத்தை அனுபவிக்க நேரிடும். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையில் தலையிடுவதால், மன உளைச்சலை உணர்வீர்கள். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமானது நன்மை பயக்கும். வியாபாரிகள் புதிய முதலீட்டாளர்களையும், வாடிக்கையாளர்களையும் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இந்நாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் பணியிடத்தில் புதிய திட்டத்தில் செயல்பட வேண்டியிருக்கும். அதற்காக கடினமாகவும் உழைக்க வேண்டியிருக்கும். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். சிலர் வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் வேலையில் திடீர் மாற்றம் அல்லது திடீர் இடமாற்றத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தால் வாழ்க்கையில் சில புதிய விஷயங்கள் நடக்கலாம். சிலர் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறலாம். தொழிலில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications