Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
Solar Eclipse 2023: ஏப்ரல் மாதத்தில் நிகழும் சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
Solar Eclipse 2023: ஜோதிடத்தில் கிரகணம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் 2 சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் ஆகும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழவுள்ளது. சூரிய கிரகணமானது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே சூரியன் வரும்போது நிகழ்கிறது.
சூரிய கிரகணத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் இந்த சூரிய கிரகணத்தின் தாக்கம் ஒருசில ராசிக்காரர்கள் மீது சற்று அதிகமாக இருக்கும். இதனால் அந்த ராசிக்காரர்கள் தொழிலில், ஆரோக்கியத்தில், நிதி நிலையில் என பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது 2023 சூரிய கிரகணத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
சூரிய கிரகணத்தின் போது சூரிய பகவான் மேஷ ராசியில் இருப்பார். இதனால் இந்த கிரகண காலமானது மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று சிரமத்தைத் தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்ப சூழல் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். கிரகணத்தின் போது சூரியன் வலுவிழந்து இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் இக்காலத்தில் மோசமான பலன்களைப் பெறக்கூடும். முக்கியமாக தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். எந்த வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாமல் போகும். காதலிப்பவர்கள், காதல் தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, மன கஷ்டங்கள் அதிகரிக்கும். இக்காலத்தில் அதிகம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் சிந்திக்காமல் செய்தால், அதன் விளைவாக எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் மகர ராசிக்காரர்களின் தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வாகன செலவுகள் அதிகரிக்கும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பிருப்பதால், ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

